Friday, November 28, 2008

மும்பையில் நடந்திருக்கும் வேதனை மிகுந்த விஷயங்கள்

இந்தியாவில் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆயினும், இது அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல நடந்துள்லது.

சுமார் 12 பேர்கள் படகில் வந்து இவ்வளவு அழிவு செய்யமுடியும் என்றால், இந்தியாவுக்கு என்று ஒரு அரசு, தேர்தல், ராணுவம், போலீஸ் எல்லாம் என்னத்துக்கு என்று தோன்றுகிறது.

அதனை விட முக்கியமாக, தற்கொலை செய்துகொண்டாவது இவ்வளவு பேரை கொல்லுவோம் என்று வந்துள்ள அந்த இளைஞர்கள் எதனால் இப்படி தூண்டப்பட்டார்கள், ஏன் இவ்வளவு வன்மம், ஏன் இந்த வன்மம், யார் இவற்றை தூண்டூவது என்ற கேள்விகளும் எழுகின்றன.

ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் அப்பாவிகள் மீதும், போலீஸ் வேன் என்று நினைத்து நின்றுகொண்டிருக்கும் அப்பாவிகள் மீதும் கன்னா பின்னாவென்று துப்பாக்கியால் சுட்டு கொல்ல முனையும் இவர்கள் மூளை பாதிக்கப்பட்டவர்களா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த கேள்விகளை சிந்திப்பவர்கள் அனைவரும் கேட்க வேண்டும்.

அந்த கேள்விகளுக்கான விடைகளே இந்த வன்முறையை நிறுத்தும்.

நண்பர்களே சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நட்புடன்
வினோத்

No comments: